Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Education News : பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு எப்போது?





தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்து உள்ளது. தற்போது விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 20-ம் தேதியுடன் பொதுத்தேர்வு முடிவடையவுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதமே ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.


இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் எப்போது திறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இம்மாதமே நிறைவடைய உள்ள நிலையில் அதற்கு பின்னர் மே மாதம் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் June  1-ம் தேதி அல்லது 5-ம் தேதிகளில் பள்ளிகளை மீண்டும் திறக்க பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments