தமிழக அரசு வேலை அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு
வழக்கு அலுவலர்கள்(Case worker) (காலிப்பணியிடங்கள் 6)
சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் வருட அனுபவம் 1 உடையவராகவும் இருக்க வேண்டும்.
வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.
பாதுகாப்பாளர் (Security Guard)(காலிப்பணியிடம் 1) :
அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1)
ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும்.
உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.
மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 22-05-2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்