Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2022-23ம் கல்வியாண்டிற்கு மாற்றுப்பணி ஆணை வழங்கியது - பணியிலிருந்து விடுவிக்க கோருதல்

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டில் (2022-23) பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்க கோரி பார்வையில் காணும் கடிதம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டதையடுத்து இக்கல்வியாண்டு முடிய (2022-23) மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டது.

தற்போது இக்கல்வியாண்டிற்கான (2022-23) பள்ளி இறுதி வேலை நாள் 28.04.2023 அன்றோடு முடிவு பெறவுள்ளதால் கடந்த ஆண்டில் இக்கல்வியாண்டு வரை மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் சேர அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments