Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை-ஆசிரியர்களுக்கு 3000 ரூபாய் -யார் யாருக்கு ஊக்கத்தொகை?- முழு விவரங்கள்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மாமன்ற கூட்டத்தொடர் தொடக்க உரையில் மேயர் ஆர்.பிரியா கூறியதாவது: செய்முறை வகுப்புகளை மேம்படுத்த முதல்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இசை ஆசிரியர்கள் உள்ள 20 சென்னை பள்ளிகளில் தலா ரூ.25,000 என ரூ.5 லட் சத்தில் இசைக்கருவிகள் கொள்முதல் செய்யப்படும். மாலை நேர சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடி செலவில் சிறு தீனி (சுண்டல், பயறு வகைகள்) வழங்கப்படும்.

ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இணைய வழியில் விரும்பும்பாடத்தை கற்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,500 வழங்கிய நிலையில் ரூ.3,000-ஆக உயர்த்தப் பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதுபோல் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,000 வழங்கிய நிலையில் தற்போது ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments