என்னுடைய நோக்கம் நானும் படித்துக்கொண்டு உங்களையும் படிக்க வைப்பது தான் என்னுடைய நோக்கம்!
முதலில் நம் பயணம் அறிவியல் பாடத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
இனி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு படத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
தினமும் இனி நமது இணையதளத்தில் TNPSC, TET, TRB MATERIALS - அப்லோடு செய்யப்படும்.
ஆறாம் வகுப்பு- பாடம் -1 அளவீடுகள்
SI system full form - System International
பன்னாட்டு அலகு முறை (SI)
வெப்பநிலை- கெல்வின்(K)
தொலைவு- மீட்டர்(m)
மின்னோட்டம்- ஆம்பியர்(A)
காலம்- வினாடி(s)
பொருட்களின் அளவு- மோல் (mol)
நிறை- கிலோகிராம் (Kg)
ஒளிச்செறிவு- கேண்டிலா (cd)
பரப்பளவின் அலகு மீ2
பருமனின் அலகு மீ3
அளவீடு என்பது என்ன?
அளவீடு என்பது தெரிந்த ஒரு அளவுடன் தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது ஆகும்.
அளவீடு- எண் மதிப்பும் மற்றும் அலகு என இரண்டு பகுதிகளை கொண்டது.
நீளம் என்றால் என்ன?
நீளம் என்பது ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு ஆகும்.
தொலைவு( நீளம்) அலகு - மீட்டர் ( metre)
சிறிய அளவுகள் மில்லி மீட்டர் மற்றும் சென்டிமீட்டரிலும் ,பெரிய அளவுகள் மீட்டரிலும் அளவிடப்படுகிறது.
நீளத்தின் அலகுகளை தெரிந்து கொள்வோம்!
1 சென்டி மீட்டர் என்பது 10 மில்லி மீட்டர்.
ஒரு மீட்டர் என்பது 100 சென்டிமீட்டர்.
ஒரு கிலோ மீட்டர் என்பது ஆயிரம் மீட்டர்.
கேள்வி:
ஒரு கிலோ மீட்டர் என்பது எத்தனை சென்டிமீட்டர்?
Answer: ஒரு கிலோ மீட்டர் என்பது 100,000 சென்டிமீட்டர் ஆகும்.
SI அலகு முறை எதற்காக தேவை?
பன்னாட்டு அலகுமுறை எதற்காக தேவை என்றால் பல நாடுகளில் வெவ்வேறு அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன அதனை நீக்குவதற்காகவும்,அனைத்து நாடுகளும் ஒரே மாதிரியான அளவீடுகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது.
SI அலகு முறை 1960 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
SI அலகுமுறையில் பன்மடங்கு மற்றும் துணை பன் மடங்குகள் முன்னொட்டுக்களாக ( prefix) பயன்படுத்தப்படுகின்றன.
நீளத்தை அளக்கும் பொழுது எப்பொழுதும் scale- லில் நாம் சுழியில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். ( சுழி என்பது பூஜ்ஜியம் ஆகும்).
வலைக்கோட்டின் நீளத்தை எவ்வாறு நாம் அளக்கலாம்?
வலைக்கோட்டின் நீளத்தை இரண்டு முறையில் அளவிடப்படுகிறது.
1) கயிறு மூலம் அளவிடுதல்.
2) கவையை( divider) பயன்படுத்தி அளவிடுதல்.
கயிறு மூலம் அளவிடுதல்: நூலின் ஒரு முனையில் முடிச்சு போடவும். வரியின் தொடக்கத்தில் முடிச்சு வைக்கவும் (புள்ளி A), அதை உங்கள் ஆள்காட்டி விரலால் அழுத்தவும் .நூலின் ஒரு சிறிய பகுதியை கோட்டினுடன் சரியாக வைக்கவும். இந்த பகுதியின் மறுமுனையை B புள்ளியில் உங்கள் மற்றொரு கையால் அழுத்தவும். உங்கள் இரண்டு விரல்களுக்கு இடையே உள்ள நூல் இப்போது கோட்டின் AB பகுதியின் அதே நீளத்தைக் கொண்டுள்ளது. இப்போது முதல் விரலை B புள்ளியில் வைக்கவும். மீண்டும் நூலின் ஒரு சிறிய பகுதியை வரியின் அடுத்த பகுதியுடன் சேர்த்து வைக்கவும்.இந்த வழியில், நூலைப் பயன்படுத்தி வளைந்த கோட்டின் முழு நீளத்தையும் கண்டறியவும். கோட்டின் முடிவைத் தொடும் இடத்தில் நூலைக் குறிக்கவும். இப்போது ஒரு மீட்டர் அளவில் நூலை நீட்டி அதன் குறிக்கப்பட்ட பகுதியை அளவிடவும். இந்த பகுதியின் நீளம் வளைந்த கோட்டின் நீளம் ஆகும்.
வளைகோட்டின் நீளத்தை கவையைப் (divider) பயன்படுத்தி அளவிடுதல்.
ஒரு தாளின் மீது AB என்ற வளைகோட்டினை வரை. கவையின் இரு முனைகளை 0.5 செ.மீ அல்லது 1 செ.மீ இடைவெளி உள்ளவாறு பிரிக்க. வளைகோட்டின் கவையை ஒரு முனையில் வைத்து அளவீட்டைத் தொடங்குக. அவ்வாறு மறுமுனை வரை அளந்து குறித்திடுக. வளைகோட்டின் மேல் சம அளவு பாகங்களாகப் பிரித்திடுக. குறைவாக உள்ள கடைசிப் பாகத்தை அளவுகோல் பயன்படுத்தி அளவிட வேண்டும்.
முக்கிய Formula:
வளைகோட்டின் நீளம் = பாகங்களின் எண்ணிக்கை x ஒரு பாகத்தின் நீளம்) + மீதம் உள்ள கடைசிப் பாகத்தின் நீளம்.
இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன?
இடம் மாறு தோற்ற பிழை என்பது ஒரு பொருளின் உண்மையான நிலையை இரு வேறு பார்வை கண்ணோட்டத்தின் வழியே பார்க்கும் போது தோன்றும் அளவீட்டு மாறுபாடு ஆகும்.
எனவே ஒரு பொருளின் அளவை சரியாக அளவிடுதல் அவசியமாகும். இதனால் ஏற்படும். இந்த மாற்றம் இடம்மாறு தோற்றபிழை எனப்படும்.இடம்மாறு தோற்றபிழையை எவ்வாறு தவிர்க்கலாம் என்றால் நமது பார்வை செங்குத்தாக இருக்க வேண்டும். அதாவது எந்த பொருளில் நாம் அளவை எடுக்கிறோமோ அது செங்குத்துப் பார்வையில் வைத்து அளவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
B - சரியானது.
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு.
நிறையின் SI அலகு கிலோகிராம்.
நிறை என்பது வேறு எடை என்பது வேறு இதனை அனைத்து நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு.
எடை என்பது நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே எடையாகும்.
நாம் பழங்கள் வாங்கும் பொழுது அந்த பழத்தின் உடைய பருப்பொருளின் அளவு மற்றும் புவி ஈர்ப்பு விசை இரண்டையும் சேர்த்து நாம் வாங்குகிறோம். இதுதான் எடை.
எனவே,
நிறை = பருப்பொருளின் அளவு
எடை= பருப்பொருளின் அளவு x புவியீர்ப்பு விசை (w= mg)
பூமியின் மீது ஒரு பொருளின் எடை அதன் நிறைக்கு நேர் தகவில் இருக்கும்.
பூமியிலும் நிலவிலும் ஒரு பொருளின் எடையின் அளவு சமமாக இருக்குமா?
பூமியிலும் நிலவிலும் ஒரு பொருளின் எடை சமமாக இருக்காது? ஏனெனில் பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு எனவே அங்கு எடை குறைவாக இருக்கும். ஆனால் இரண்டிலும் நிறை சமமாகவே இருக்கும்.
நிலவின் ஈர்ப்பு விசை புவியின் ஈர்ப்பு விசை போல ஆறில் ஒரு பங்கு ஆகும்.
பூமியில் உள்ளதை விட நிலவில் ஒரு பொருளின் எடை எத்தனை மடங்கு குறைவாக இருக்கும்?
நிலவில் ஒரு பொருளின் எடை பூமியில் உள்ளதை விட ஆறு மடங்கு குறைவாகவே இருக்கும்.
ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ கிராம் ஆகும்.
தெரிந்த ஒரு நிலையான நிறையோடு ஒரு தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவது படித்தர நிறை என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு: பொது தராசு
பகல் நேரத்தை கணக்கிட முற்காலத்தில் மக்கள் மணல் கடிகாரம் மற்றும் சூரிய கடிகாரத்தை பயன்படுத்தினர்
நேரத்தை துல்லியமாக அளவிட மின்னணு கடிகாரங்கள் electric watch மற்றும் நிறுத்து கடிகாரங்கள் ( stop watch) பயன்படுத்தப்படுகின்றன.
கார் ,பைக் போன்ற வாகனங்களில் தொலைவை கணக்கிடுவதற்கு ஓடோமீட்டர் (Odometer)என்ற தானியங்கி கருவி பயன்படுத்தப்படுகிறது.
வானியல் பொருட்களுக்கிடையே உள்ள தொலைவை ஒளி ஆண்டின் மூலம் கணக்கிடுகிறோம்.
ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளியானது கலந்து செல்லும் தொலைவு ஆகும்.
தற்போது நீளத்தை அளவிட பயன்படுத்தப்படும் அளவுகோல் 11 ஆம் நூற்றாண்டில் வில்லியம் பெட்வெல் என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மில்லிகிராம அளவிற்கு துல்லியமாக நிறைய அளவிட பயன்படும் கருவி மின்னணு தராசு ஆகும்.
19790 இல் பிரெஞ்சு நாட்டினரால் மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட அளவுகளால் உருவாக்கப்பட்டது.
படித்தர மீட்டர் கம்பி:
படித்தர மீட்டர் கம்பி பிரான்ச் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள எடைகள் மற்றும் அளவிடுவதற்கான அனைத்து உலக நிறுவனத்தில் பிளாட்டினம்- இரிடியம் உலோக கலவையினால் ஆனது.
இந்த படித்தர மீட்டர் கம்பி நகல் ஒன்று டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ளது.
ஒரு கிலோ கிராம் எடை கற்கள் என்பது பிளாட்டினம் -இரிடியும் உலோக கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிலைக்கு சமம்.
இந்த உலகக் கலவை பிரான்சில் உள்ள செவ்ரெஸ் என்ற இடத்தில் சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்து உலக நிறுவனத்தால் 1889 முதல் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பு:
இந்த பதிவில் ஏதேனும் குறைகள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் நண்பர்களே!
இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் நண்பர்களே!
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்