Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC, TET, TRB MATERIALS - 6ம் வகுப்பு பாடம் 3- நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள்

இன்றைய பதிவு: TNPSC,TET, TRB MATERIALS 

பாடம் 3- நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்


பருப்பொருள் (Matter)என்றால் என்ன?
இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் நிறை உடைய பொருள்கள் பருப்பொருள்கள் ஆகும்.

Matter is anything that has mass and occupied space.

பருப்பொருள்கள் எதனால் ஆனவை?
பருப்புகள் அணுக்களால் ஆனவை. அணு என்பது மிகச் சிறிய துகளாகும். இந்த மிகச்சிறிய அணுக்களை உறுபெருக்கினால் கூட பார்க்க முடியாது.


அணுக்களின் அமைப்பை ஸ்கேனிங் எலக்ட்ரானிக் நுண்ணோக்கி ( scanning electron microscope) மற்றும் ஊடுபுழை எலக்ட்ரான் நுண்ணோக்கி (tunnelling electronic microscope) மூலமாக அணுவின் அமைப்பை கண்டறிய முடியும்.

இந்திய தத்துவ மேதை- கனடா என்பவர் அணுவை பரமானு என அழைத்தார்.

கிரேக்க தத்துவ மேதை டெமாக்ரட்டிஸ் என்பவர் அட்டாமஸ் என கூறினார்.


ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்.

அணுவில் மூன்று துகள்கள் உள்ளன.
அவை
எலக்ட்ரான் 
புரோட்டான் 
நியூட்ரான்


பருப்பொருட்களின் சிறப்பு பண்புகள்:
பருப்பொருட்களின் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. அது ஒவ்வொரு பரப்பொருளிலும் வேறுபாட்டிற்கும்.

பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை உண்டு.

பருப்பொருட்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
திண்மம் (solid)
திரவம்(liquid)
வாய்வு(gas)

திண்மத்தில் உள்ள துகள்கள் மிகக் குறைந்த இடைவெளியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு: கல்

திரவத்தில் உள்ள துகள்கள் திண்மத்தை விட திரவத்தில் அதிக இடைவெளியுடன் ஒழுங்கற்ற நிலையில் துகள்கள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நீர்


வாயுக்களில் உள்ள துகள்கள் அதிக இடைவெளியுடன் எளிதில் நகரக்கூடிய வகையில் உள்ளன. எடுத்துக்காட்டு: காற்று


திண்மம் மற்றும் திரவத்தின் அழுத்த பண்பை வாயுக்களின் அழுத்தத்தோடு ஒப்பிடுதல்.

திண்ம பொருட்கள் அழுத்தத்திற்கு உட்படாது.
திரவம் சிறிதளவு அழுத்தத்திற்கு உட்படும்.
வாய்வு அதிக அளவு அழுத்தத்திற்கு உட்படும்.

திண்மம் ->திரவம் -> வாயு

திரவமாக்கல் என்றால் என்ன?
திரவமாக்கல் என்பது வாய்வு நிலையில் உள்ள பொருட்களை திரவ நிலைக்கு மாற்றும் செயல்முறையாகும். வாய்வுவிள் அழுத்தத்தை அதிகரிக்கும் போது மூலக்கூறுகள் நெருங்கி அதன் வெப்ப நிலையில் குறைகிறது. எனவே மூலக்கூறுகளின் ஆற்றல் குறைந்து அவை வாய்வு நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றமடைகிறது.



பருப்பொருள்கள் இரண்டு வகைப்படும்
தூய பொருள் ( pure substance)
கலவை(mixtures)

தூய பொருட்கள் என்பது ஒரே மாதிரியான துகள்களை கொண்ட தனிமம் அல்லது சேர்மம் ஆகும்.

தூய பொருள் இரண்டு வகைப்படும்
தனிமம்( elements)
சேர்மம்( compounds)

கலவை இரண்டு வகைப்படும்
ஒருபடித்தான கலவை (homogeneous mixture)
பலபடித்தான கலவை (heterogeneous mixture)

தனிமம் என்பது சிறிய துகள்களாலான ஒரே வகை அணுக்களால் ஆனவை.

மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் சேர்க்கை ஆகும்.

சேர்மம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் வேதியியல் சேர்க்கை மூலம் இணைந்து உருவாகக்கூடிய பொருளாகும்.

கலவை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதி பொருட்களை கொண்டவை.
கலைவியில் அடங்கியுள்ள பொருட்களின் அளவு நிலையான விகிதத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு கலவை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே தன்மையுடைய துகள்களை கொண்ட தூய்மையற்ற பொருளாகும்.

கலவையின் பகுதி பொருட்கள் எந்தவிகிதத்திலும் கலந்து இருக்கும்.


ஒரு கலவை எவ்வாறெல்லாம் உருவாகலாம் என்றால் , இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமங்கள் இணைந்து ஒரு கலவையாக மாறலாம். எடுத்துக்காட்டாக தங்கம் மற்றும் தாமிரம் கலந்த கலவை

இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சேர்மங்கள் இணைந்து ஒரு கலவையாக மாறலாம்.
எடுத்துக்காட்டாக: நீர் ,கார்பன் டை ஆக்சைடு இனிப்பு மற்றும் நிறமூட்டி ஆகியோரின் கலவை
ஒரு தனிமம் அல்லது சேர்மம் இணைந்து ஒரு கலவையாக மாறலாம்.
எடுத்துக்காட்டாக டிஞ்சரில் அயோடின் ஆல்கஹாலுடன் கலந்துள்ள கலவை.


கலவைகளை பிரித்தல்

கலைவைகளை எதற்காக பிரிக்க வேண்டும்?

கலவைகளில் உள்ள மாசு மற்றும் தீங்கு விளைவிக்கும் பகுதி பொருட்களை நீக்குவதற்கும்.
எடுத்துக்காட்டாக அரிசியில் உள்ள கற்களை பொறுக்குதல்.

பயனளிக்கும் ஒரு பகுதி பொருள்களை மற்ற பகுதியை பொருட்களில் இருந்து தனியே பிரிப்பதற்கும். எடுத்துக்காட்டாக பெட்ரோல் இருந்து பெட்ரோல் டீசல் போன்ற பொருட்களை பெறுதல்.

ஒரு பொருளை மிகுந்த தூய நிலையில் பெறுவதற்கும். எடுத்துக்காட்டாக தங்க சுரக்கத்தில் இருந்து தங்கம் பெறும் முறை


கலவைகளை பிரித்தெடுக்கும் முறைகள்:
கலவையில் உள்ள பகுதி பொருட்களின் பண்புகளைப் பொறுத்து கலவைகளை பிரித்தெடுக்கப்படுகின்றன. அது பொருட்களின் பண்புகளான அளவு, வடிவம், இயற்பியல் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே பிரித்து எடுக்கப்படுகின்றன.

வடிகட்டுதல்



சலித்தல்
வெவ்வேறு அளவுடைய திடப்பொருட்களை பிரித்தெடுக்கும் முறை சலித்தல் ஆகும். எடுத்துக்காட்டாக மாவில் இருந்து தவிடை நீக்குதல்
கடைதல்
மிகச்சிறிய அளவிலான கரையாத திடப்பொருட்களை திரவத்திலிருந்து பிரித்தெடுக்கும்  முறைக்கு கடைதல் என்று பெயர் தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல் ஆகும்.

துணி துவைக்கும் இயந்திரம் மூலம் ஈரம் நிறைந்த துணையிலிருந்து நீரை வெளியேற்றும் முறைக்கு மைய விலக்கு விசை மூலம் வெளியேற்றப்படுகிறது.


கதிர் அடித்தல்
தானியங்களை அவற்றின் தாவர தண்டுகளில் இருந்து பிரிப்பதற்காக விவசாயிகள் தண்டுகளை கடினமான பரப்பில் அடிக்கும் முறைக்கு கதிர் அடித்தல் என்று பெயர்.

தூற்றுதல்:
 
கலவினை குறிப்பிட்ட உயரத்தில் இருந்து காற்றடிக்கும் திசையில் விழுச் செய்ய வேண்டும். உமி போன்ற லேசான பிற பொருட்கள் காற்றினால் அடித்து செல்லப்பட்டு தனி ஒரு குவியலாக சேர்ந்து இருக்கும். எடை அதிகம் உள்ள திடப் பொருள் அதாவது தானியங்கள் தூற்றுபவரின் அருகே சிறு குயிலாக சேரும் இந்த முறைக்கு தூற்றுதல் என்று பெயர்.

உமி என்றால் என்ன?
உமி என்பது விதை அல்லது தானியத்தை சுற்றி காணப்படும் கடினமான அல்லது பாதுகாப்பான உரையாகும்.

உமி கட்டுமான பொருளாகவும், உரமாகவும் ,மின் காப்பு பொருளாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது.

கைகளால் தெரிந்தெடுத்தல்
எளிதில் கண்ணால் காணக்கூடிய பகுதி பொருட்களை கைகளால் பிரித்தெடுக்கும் முறை.
அரிசியில் இருந்து தேவையில்லாத கற்களை பிரித்தெடுக்கும் முறையாகும்.

காந்த பிரிப்பு முறை
காந்தத்தினை பயன்படுத்தி தின்மங்களை பிரிக்கும் முறைக்கு காந்த பிரிப்பு முறை என்று பெயர். இதில் காந்த தன்மையற்ற பொருட்கள் இருந்து காந்த தன்மையுடைய பொருட்களை பிரித்து எடுக்க முடியும்.

படிய வைத்தல் அல்லது வண்டல் படிவாக்கல்
ஒரு நீர்மக் கலைவையில் கனமான பொருட்கள் இருப்பின் அவற்றை சிறிது நேரம் அசைக்காமல் வைக்கும் போது எடை அதிகமான பொருட்கள் வண்டலாக தங்கிவிடும். மேலடுக்கில் தெரிந்த நீர்மம் கிடைக்கும் இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.

தெளிய வைத்து இறுத்தல்:
இச்செயல் படியவைத்தலை தொடர்ந்து நிகழ்த்தப்படுவதாகும். அடியில் தங்கிய வண்டலை பாதிக்காத வண்ணம் மேல் அடுக்கில் உள்ள நீர் மற்றொரு கலனிற்கு மாற்றப்படும் முறையாகும்.

வடிகட்டுதல்:
நுண்ணிய மாசுகளை நீக்குவதற்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது வடிதாளில் களிமண் துகள்களை காட்டிலும் அளவில் சிறிய நுன்துளைகள் உள்ளன. ஒரு கலவையில் உள்ள களிமண் மற்றும் மணல் போன்ற கரையாத பொருட்களை வடிதாளை பயன்படுத்தி பிரித்தெடுக்கும் முறையாகும்.

கலப்படம் என்றால் என்ன?
கலப்படம் என்பது ஒத்த வடிவமுடைய தரம் குறைந்த பொருளை கலந்து ஒரு முதன்மை பொருளினை தூய்மையாற்றதாக மாற்றுதல்.

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மெட்டீரியல் அனுப்பியதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஏதேனும் குறைகள் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணவும் நண்பர்களே!

Post a Comment

0 Comments