Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி




எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே "எங்கிருந்தும் எந்நேரத்திலும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், பொதுமக்கள் நில உட்பிரிவிற்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமபுற, நகர்புற நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு, தமிழ் நிலம் என்னும் மென்பொருள் மூலம் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கணினி படுத்தபபட்ட வரைபடங்களை தனித்தனி நகர புலங்களுக்கான வரைப்படங்களாக மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் இப்புதிய வசதி மூலமாக பொதுமக்கள் கிராமபுற, நகர்புற நில வரைபடங்களை கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம் மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக்கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குகிறது.

விண்ணப்ப நிலையை அறிய https://eservices.tn.gov.in/, eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டாமாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின் போது, ஒவ்வொரு நிலைமையும், மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.

பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா/சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments