Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TANCET-டான்செட் நுழைவுத் தேர்வு நடைமுறையில் மாற்றம்

Anna University நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான TANCET தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் MCA படிப்புக்கும், மதியம் MBA படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே, ME, MTECH, எம்.பிளான்., எம்.ஆர்க். ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்பு களுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

ஆனால், நடப்பாண்டு அதை மாற்றி, M E. உட்பட முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்காக புதிய தேர்வு முறையை ANNA UNIVERSITY அமல்படுத்தியுள்ளது. அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (சிஇஇடிஏ) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிஇஇடிஏ தேர்வு மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த இரு தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் www.tancet. annauniv.edu என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 1 முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப் பின் tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments