கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டங்களுக்காக மின்னஞ்சல் முகவரி தேவைப்படுவதால் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் 12ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளன.
FULL DETAILS:
2022-23ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்க இயலும், மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றாகும். மின்னஞ்சல்தொடங்கும் செயல்பாடு:
எனவே, இவ்வாண்டு 12ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்கிட தக்க வழிகாட்டிட தலைமையாசிரியர்களும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கான மின்னஞ்சல் உருவாக்குதல் குறித்த விளக்கக் காணொளி லிங்க் மூலம் வழங்கப்பட்டுள்ளது https://youtu.be/elGOCADPmsA. மேலும், அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது பின்வரும் கூடுதல் விவரங்களையும் வழங்குதல் வேண்டும்.
மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்:
அம்மின்னஞ்சலை உருவாக்கிய பின் மாணவர்கள் மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது மற்றவர்களுக்கு மின்னஞ்சல் எவ்வாறு அனுப்புவது. பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும்.
அவ்வாறு உருவாக்கப்படும் மின்னஞ்சலின் கடவுச்சொல்லை (PASS WORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும். மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் வழிகாட்டிடல் வேண்டும்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன் என்றும் உயர்கல்வியில் மாணவர்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினை மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல் வேண்டும். இச்செயல்பாட்டினை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜனவரி 09-01- 2023 முதல் 12-01-2023 வரை Hitech லேப் கணினிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பொறுப்புகள்:
இச்செயல்பாடு குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை பயிற்சியாளர்கள் பள்ளிகளில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இணைத்து ஏற்கனவே உருவாக்கியுள்ள whatsapp குழுவில் இது குறித்து பகிர்ந்து அவர்களிடமிருந்து அறிக்கை பெற்று அனுப்புதல் வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்