தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம் மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவ. 15-ம் தேதி மின் வாரியம் தொடங்கியது.
இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிச. 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக் காததால், இதற்கான காலக்கெடுவை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் 2,811 மின் வாரிய பிரிவு அலுவ லகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. நேற்று வரை 2.34 கோடி மின் நுகர்வோர், தங்க ளது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப் புடன் ஆதார் எண்ணை இணைப் பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (ஜன. 31) நிறைவடைகிறது. இந்த காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று மின் வாரி யம் தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர் வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இத னால், மின் பயன்பாடு கணக் கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாத துடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்