Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பட்டா பற்றிய செய்தி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே 'எங்கிருந்தும் எந்நேரத்திலும் " இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

https://tamilnilam.tn.govin/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் நிலையை https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பட்டா மாறுதலின் ஒவ்வொரு நிலையும் மனுதாரருக்கு 'குறுஞ்செய்தி" வாயிலாக தெரிவிக்கப்படும். பட்டாமாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின், பொதுமக்கள் (1) பட்டா மாறுதல் உத்தரவு நகல், (2) பட்டா / சிட்டா, (3)புலப்படம், (4) அ-பதிவேடு ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்" https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments