மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களை அவர்களது ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து இன்று (31.01.2023) சென்னை தலைமையகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் காணொலி மூலம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது அனைத்து இயக்குநர்கள். தலைமை அலுவலக தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக
பங்ககேற்றனர். பின்னர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் கடந்த 15.11.2022 அன்று தொடங்கப்பட்டு இன்று காலை 11.00 மணி வரை 78 நாட்களில் மொத்தம் உள்ள 2 கோடியே 67 இலட்சம் மின் நுகர்வோர்களில், 2 கோடியே 42 இலட்சம் மின் நுகர்வோர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணோடு இணைத்திருக்கின்றார்கள். இது ஒரு மகத்தான பணி ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணியாக ஒரு வெற்றிப் பயணமாக மின்சார வாரியத்தின் மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றி 2 கோடியே 42 இலட்சம் மின் நுகர்வோர்களின்
ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கக்கூடிய மின்வாரியத்தினுடைய அனைத்து நிலையில் பணியாற்றும் அலுவலர்கள் தொடங்கி, கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளையும் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.மொத்தம் இருக்கக்கூடிய நுகர்வோர்களில் ஏறத்தாழ 90.69 விழுக்காடு நுகர்வோர்கள் இன்று காலை வரை தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்திருக்கின்றார்கள். மீதமிருக்கக் கூடிய 9.31 விழுக்காடு இணைக்க வேண்டிய மின்நுகர்வோர்கள் நிலுவையில் இருக்கின்றார்கள். வீடுகளைப் பொருத்தவரைக்கும் 2 கோடியே 32 இலட்சம் மின் நுகர்வோரில் 2 கோடியே 17 லட்சம் பேர் இணைத்திருக்கின்றார்கள். இன்னும் 15 இலட்சம் பேர் இணைக்க வேண்டிய நிலுவை இருக்கிறது. கைத்தறியைப் பொறுத்தவரைக்கும் 74 ஆயிரம் இணைப்புகளில் 70 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு 4.000 இணைப்புகள் மட்டுமே இணைக்க வேண்டி இருக்கிறது. விசைத்தறியைப் பொறுத்தவரைக்கும் 1 இலட்சத்து 63 ஆயிரத்தில், 1 இலட்சத்து 52 ஆயிரம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதில் 9 ஆயிரம் பேர் இணைக்கவேண்டி இருக்கிறது. குடிசைகள் மிக அதிகமாக இருக்கிறது. 9 இலட்சத்து 44 ஆயிரம் பேரில் 5 இலட்சத்து 11 ஆயிரம் பேர் இணைத்திருக்கிறார்கள். இன்னும் ஒரு 4 இலட்சத்து 33 ஆயிரம் குடிசைகள் தான் இணைக்கவேண்டிய நிலுவை மிக அதிகமாக இருக்கின்றது. 54 சதவீதம் முடிந்திருக்கிறது. விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் 23 இலட்சத்து 28 ஆயிரம் பேர் மொத்தத்தில், அதில் 18 இலட்சத்து 28 ஆயிரம் பேர் இதுவரைக்கும் இணைத்திருக்கிறார்கள். அதில் ஒரு 5 இலட்சம் பேர் விவசாய மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை இணைக்க கூடிய நிலுவை இருக்கின்றனர். மொத்தத்தில் இன்னும் ஒரு 9 சதவீதம் இணைக்ககூடிய நிலையில் இருக்கிறோம்.
எனவே, இப்பொழுது மின் வாரியத்தினுடைய உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தி ஒவ்வொரு வட்டங்கள் வாரியாக கூடுதலாக எத்தனை நாட்கள் தேவைப்படும். எத்தனை நாட்களில் முடிக்க முடியும் என்று விவரங்களைக் கேட்டு என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்றும் அந்த சிரமங்களை எல்லாம் களைவதற்கு வாரியத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒரு விவசாய நிலமாக இருக்கலாம் அல்லது வீடுகளாக இருக்கலாம் ஒன்றுக்கும்
மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்பட்சத்தில் ஒரு ஆதார் எண்ணை இணைக்கின்ற பொழுது அதில் சிரமங்கள் ஏற்படுகின்றது என்று சொன்னார்கள். எனவே. ஒரு மின் இணைப்பு எண்ணோடு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்களை இணைப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனையும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, பெரு நிறுவனங்கள் கம்பெனிகள், அறக்கட்டளைகள் பொறுத்த வரைக்கும் பண்ணை போன்ற பெயர்களில் இருந்தால் அந்த பெரு நிறுவனம் கம்பெனிகள், அறகட்டளைக்கள் அல்லது பண்ணை சார்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நபர்களுடைய ஆதார் எண், அதனுடைய உரிமையாளர் எண் கண்டிப்பாக இணைத்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மின் இணைப்பு உரிமையாளர்கள் தனிப்பட்ட நபரால் அல்லது வாடகை தாரராக இருக்கும் பட்சத்தில் தங்களது தனிப்பட்ட ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று அவர்களிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் பெருன்பான்மையாக இருப்பது மின் இணைப்பு ஒருவர் பெயரில் இருக்கும் சொத்தினுடைய உரிமையாளர் இரண்டு அல்லது மூன்று பேர் இரண்டு ஒன்றுக்கும் மேற்பட்டவராக இருக்க கூடிய சூழலில் யாருடைய எண்ணை கொடுப்பது என்பது அவர்களுக்குள் இருக்கக்கூடிய சிறு தயக்கமாக இருந்தது. ஆகையால், ஒரு மின் இணைப்பு எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் அதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, எனவே. குறிப்பிட்ட நாட்களில் மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் மின்வாரியத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றி அவர்களுக்கு இந்த நேரத்தில் அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். மீதம் இருக்கக்கூடிய 9 சதவீதம் மின் நுகர்வோர்களும் இப்பொழுது இருக்கக்கூடிய அனைத்து சிரமங்களும் களையப்பட்டு மிக நேர்த்தியாக மிக சிறப்பாக விரைவாக சேர்ப்பதற்கான நடைமுறைகள் இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, கூடுதலாக இந்த 9 சதவீதம் மின் இணைப்பு எண்களோடு. ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகின்ற பிப்ரவரி 15 ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்குள்ளாக அனைத்து நுகர்வோர்களும் 100 சதவீதம் அதாவது2 கோடியே 67 இலட்சம் மின் நுகர்வோர்களும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். 15 நாட்கள் கால நீட்டிப்பு இருப்பதால் வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் கடைசி கட்டத்தில் முயற்சிக்காமல் இன்று முதலே தொடங்கி கால கெடுவிற்கு முன்பாகவே நிறைவு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த 15 நாட்கள் நீட்டிப்பு என்பதே இறுதி வாய்ப்பாகும். மேலும், கால நீட்டிப்பு மின் வாரியத்தின் மூலம் வழங்க வாய்ப்புகள் இல்லை. எனவே, இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி மின் நுகர்வோர்கள் 100 சதவீதம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து கொள்ளுமாறு மின் வாரியத்தின் சார்பாகவும் உங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே, ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஆன் லைன் வாயிலாக இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், மின் நுகர்வோர்களுக்கு வசதியாக 2811 பிரிவு அலுவலகங்கள் மூலமாகவும் அதன்பிறகு, நுகர்வோர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களைய 2811 சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் நுகர்வோர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது. தற்போது, கூடுதலாக மின் நுகர்வோர் இல்லத்திற்கே நேரடியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியிணை தொடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 2 இலட்சம் மின் இணைப்பு எண்கள் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் 15 நாட்களுக்குள்ளாகவே 100 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிடும் என்னும் நம்பிக்கை எங்கள் அனைவருக்குமே இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட மற்ற துறைகளில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை சுமார் 4500 கோடி ரூபாய் உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் நிதித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு படிப்படியாக விடுவிப்பதற்கு உத்தரவுகள் வழங்கியிருக்கிறார்கள் என்று பேசினார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்