திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், திருமதி சரண்யா மேலாளர்(விற்பனை)9080294484, டாக்டர் சுரேஷ் மேலாளர் (விற்பனை) 9865254885 என்ற எண்ணில் அலுவலரை தொடர்பு கொள்ளவும் என ஆவின் பொதுமேலாளர் திரு.எ.பி.நடராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்