இந்நிரலாக்கப் போட்டியினை நடத்துவதற்கு தலைப்புகள் 18 கண்டறியப்பட்டன. பின்பு, VIT உடன் கலந்தாலோசித்து 8 தலைப்புகள் இறுதி செய்யப்பட்டன. அவையாவன:
1. Identifying Domain Specific words
2. Tamil Alphabets Sorting
3. Naming an Object in an Image 4. Generating Subtitles in Tamil
5. Tamil Language based Message Service
6. A mobile App to Scan the Name Boards 7. Cyber Crime, Laws - IT Act
8. Enhancing learning Terminologies
இதனைத் தொடர்ந்து 8 தலைப்புகளில் 30 திட்டங்கள் பெறப்பட்டு அவற்றுள் 10 திட்டங்கள் இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்நிரலாக்கப் போட்டியானது 17.12.2022 முதல் 19.12.2022 வரை நடைபெற்றது. கடந்த 19.12.2022 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் VIT வல்லுநர்கள் அவற்றிலிருந்து 3 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தனர்.
முதலிடமாகத் தேர்வு செய்யப்பட்ட Identifying context based porecedent rulings for a given case in Tamil என்ற தலைப்புக்கு ரூ.50000/- இரண்டாம் இடம் பெற்ற Identifying name boards on the bus, bus stop (Udhavi) என்றதலைப்புக்கு ரூ.30000/- மூன்றாம் இடம் பெற்ற Sign language subtitle generator in Tamil என்ற தலைப்புக்கு ரூ. 20000/- என மொத்தம் ரூ.1,00,000/- பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை இன்று (22.12.2022). தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வழங்கினார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்