Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி

எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும்" என்று வாழ்வதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் -வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை.

அந்த வகையில், கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும் எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது.

அதற்கு, முந்தைய ஆண்டுகளில் நம்முடைய மாநிலம் சந்தித்த மந்த நிலையை நாம் மாற்றிக் காட்டினோம். மக்கள் வாழ்வு மீண்டும் வளம் பெறத் துவங்கியது.

இப்போது 2023-ஆம் ஆண்டில் உங்கள் ஒவ்வொருத்தருடையசமூக - பொருளாதார வளர்ச்சியையும் இன்னும் அதிகரிக்கும்ஆண்டாக அமைய, நானும் நமது அரசும் தொடர்ந்து பாடுபடுவோம்.
 
உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை பார்ப்பதுதான் எனக்கு முக்கியம். அதற்காகத்தான் நான் முதலமைச்சர் பதவியை ஒரு பெரும் பொறுப்பாக பார்த்து பணியாற்றி வருகிறேன்.

Post a Comment

0 Comments