Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணியினை மின் வாரியத்தின் மூலமாக தொடங்கப்பட்டு இன்று நண்பகல் 12 மணி வரைஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய 2 கோடியே 67 இலட்சம் மின் இணைப்போடு இதுவரை ஒரு கோடியே 62 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்திருக்கிறார்கள். 60.82 சதவீதம் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்திருக்கின்றார்கள். 


இந்த மகத்தான பணிகளுக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று இன்று நடந்த தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களும், அலுவலர்களும் கால நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழகத்தினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவருடைய அனுமதியைப் பெற்று வருகின்ற 31.01.2023 வரை மின் இணைப்பு எண்ணோடு ஆதாரை இணைக்கக்கூடிய பணிக்கு 'கால நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே. மின் நுகர்வோர்களை அன்போடு நாங்கள் கேட்டுக்கொள்வது, ஜனவரி 31க்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற நிலையில் இருந்து விடாமல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதிக்குள் இருக்கக்கூடிய நாட்களை பயன்படுத்தி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைநிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் மூலமாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments