Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உள்ள முக்கிய செய்தி

தமிழ்நாட்டில் நாளை முதல் வீடு வீடாக சென்று பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. ஜனவரி 11 வரை நடக்கும் கணக்கெடுப்பு பணியில் பள்ளி நிர்வாகங்கள், கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநிற்றலில் உள்ள மாணவர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் குழுக்கள் அமைத்து விவரங்களை சேகரிக்க  உத்தரவிடப்பட்டுள்ளன.

முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகளாக கருதப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக விடுமுறை எடுத்து பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகளாக கருதப்படுபவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளன.

Post a Comment

0 Comments