Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஊராட்சி மன்றம் செலுத்த வேண்டிய வரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்- இந்த தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

ஊராட்சி மன்றம் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளும் இனிமேல் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும் எனவும், இந்த நடைமுறை வருகின்ற 15.12.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
2022-2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத் தொடரின்போது

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. "கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், விளம்பர வரி, உரிமக்கட்டணம் போன்றவற்றை இணைய வழியின் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும்" அதன்படி, முதற்கட்டமாக, பார்வை 2-ன் வழியாக தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்களை இணையதளத்தின் மூலமாக வீட்டு வரி மற்றும் சொத்து வரியினை நடைமுறைப்படுத்துவதற்குரிய மென்பொருள் பயிற்சி அளித்தல் தொடர்பாக செங்கல்பட்டு . கடலூர். ஈரோடு. மதுரை. திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்ட தலா ஓர் ஊராட்சியில் . இப்பொருள் தொடர்பாக கிராம ஊராட்சி செயலர் மற்றும் ஒரு கணினி இயக்குபவர் ஆக இரு பணியாளர்களுக்கு மென்பொருள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments