Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளிக்கல்வி -அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் செயலி(App) வாயிலாக வருகைப்பதிவு மேற்கொள்ளல் - அறிவுரைகள் வழங்குதல்

தமிழ்நாட்டில் உள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும் தொடக்க/நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவுகள் TNSED Schools செயலி (App) மூலம் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

எளிமையான முறையில் வருகையினை பதிவேற்றம் செய்வதற்காக ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் வருகைப்பதிவுக்கென மட்டும் தனியாக TNSED Attendance என்ற செயலி உருவாக்கப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 01.01.2023 முதல் இதனை பிற மாவட்டங்களுக்கும் நடைமுறைப்படுத்திட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்புதிய செயலியை பயன்படுத்துவதற்கு முன்பு கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்.

1. ஏற்கெனவே உள்ள TNSED Schools செயலியில் இருந்து வெளியேற (log out) வேண்டும். இச்செயலியில் உள்ள attendance module டிசம்பர் 31, 2022 முதல் செயல்படாத (disable) நிலைக்குச் செல்லும்.

2.Google play store-ல் கீழ்க்கண்ட இணைப்பினை (link) பயன்படுத்தி வருகைப் பதிவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள TNSED Attendance செயலியினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். https://cutt.ly/TNSEDAttendance

3. ஏற்கெனவே உள்ள பள்ளி/ஆசிரியர்களின் Username/passwordஐ பயன்படுத்தி உள்நுழைவு (log in) செய்துகொள்ள வேண்டும்.

4. உள் நுழைவுக்குப்பின் (log in) working status - Fully working என முன் இருப்புதகவல் (default) ஆக இருக்கும். பள்ளி உள்ளூர் விடுமுறை அல்லது அரை நாள் வேலை நாள் என்று இருப்பின் அதற்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

5. ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு இரு வேளைகள் (முற்பகல், பிற்பகல்) வருகைப் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.


Post a Comment

0 Comments