Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Alert news: சீனாவை மிரட்டும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியது- முழு விவரங்கள்

சீனாவை மிகவும் அச்சுறுத்தி வரும் புதிய வகை  உருமாறிய கொரோனா வகையான BF .7 பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 குஜராத்தில் இரண்டு பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

புதிய வகை கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தொற்று பரவல் அதிகரித்த நிலையில் இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது ஒன்றிய அரசு.

 அனைத்து மாநிலங்களிலும் கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் அறிவித்துள்ளார். இந்த புதிய வகை கொரோனா காரணமாக அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments