Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- 9 காலி பணியிடங்கள்- tamilnadu jobs news


மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதா விபரங்களை madurai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் 30.12.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் - நியமனத்திற்கான தகுதிகள் : 

1 ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம் MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும். 

2. அதிக பட்ச வயது 35க்குள் இருக்க வேண்டும்.

3. சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

 4. இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம்.

நிபந்தனைகள்:

 1. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

 2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்து தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

 3. வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வட்டாரத்தினை சரியாக குறிப்பிடவேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 30.12.2022


NOTIFICATION- CLICK HERE

Apply online -CLICK HERE


Post a Comment

0 Comments