Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல்-2023 மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல்-2023 மாற்றுத்திறனாளி பள்ளி மாணாக்கர்கள் தேர்வு நேரத்தில் சலுகைகள் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்றல் 


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் +2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்:

1. பார்வையில் கண்டுள்ள அரசாணைகளில், அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை பொதுத் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுள், கீழ்க்காணும் ஆறு வகைகளுக்குட்பட்ட மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் நலன் கருதி, பிற மாணவர்களுக்கு சமமாக அவர்களும் எவ்வித குறைகளுமின்றி தேர்வெழுதி மதிப்பெண்கள் ஈட்டுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை தேர்வு நேரங்களில் வழங்க அரசு அனுமதித்துள்ளது. (அரசாணைகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) காணவாம்)

2. மேற்குறிப்பிட்ட அரசாணைகளின்படி, பொதுத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தங்கள் பள்ளியில் +2 பயிலும் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் எடுத்துரைக்க வேண்டும்.


Post a Comment

0 Comments