Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கலைத் திருவிழா- திருத்தி அமைக்கப்பட்ட சுற்றறிக்கை- முழு விவரங்கள்

கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் "கலைத்,திருவிழா" என்னும் பெயரில் நடைபெற உள்ளது. 

கலைத்திருவிழாப் போட்டிகள் பின்வருமாறு 3 பிரிவில் (Category) நடத்தப்பெறுதல் வேண்டும்.


பிரிவு 1 : 6 முதல் 8 ஆம் வகுப்பு:

பிரிவு 2 : 9 மற்றும் 10 ஆம் வகுப்பு:

பிரிவு 3 : 11 மற்றும் 12ஆம் வகுப்பு

இம்மூன்று பிரிவில் நடைபெறும் போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளான வட்டார. வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிலைகளில் நடைபெறும்.

பள்ளி அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் முதல் தகுதி பெறும் ஒருவர் /ஒரு குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரு தகுதிகளை பெறும் தனிநபர் / குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் தகுதியை பெறும் தனிநபர் /குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.

Post a Comment

0 Comments