Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - இன்று (13.12.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC - இன்று (13.12.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:16/2025, நாள் 07.10.2025 வாயிலாக இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தமிழ்நாடு அமைச்சுப் பணி / தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவி வகிப்பவர்களை கொண்டு பணி மாறுதல் மூலமான தெரிவிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி VA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான விரிந்துரைக்கும் வகை தேர்வு 21.12.2025 மு.ப. & பி.ப தேதியில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments