தமிழ்நாட்டில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணிகள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கான நாளை தேர்வு நடைபெறுகிறது. @ 12.10.2025
இவ்வறிவிக்கையின்படி, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணினி அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பாடங்கள் சார்ந்த காலிப்பணியிடங்களுக்கு 2,36,530 பணிநாடுநர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுள் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக, 3,734 மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். 856 தேர்வர்கள் Scribe உடன் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு சார்ந்த OMR விடைப்படிவங்கள் மற்றும் வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் விண்ணப்பதாரர்களின் வசதிகேற்ப அவரவர் வசிப்பிட மாவட்டங்களிலே அமைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டினை (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்நுழைவுச்சீட்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களை
தேர்வுக்கு முந்தைய நாளே பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம் என தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்வுகள் சார்ந்து ஏதேனும் ஐயப்பாடுகள் இருப்பின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு (Liaison Officer) அவர்களது பெயர் மற்றும் அலைபேசி எண் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு ஏதேனும் தேர்வு சார்ந்த ஐயப்பாடுகள் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு உரிய தகவல்கள் பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்