Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி -II மற்றும் IIA) -தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி -II மற்றும் IIA) -தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. (Press Release)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 28.09.2025 மு.ப. நடத்தப்பட்டது. இதில் பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது 14.10.2025 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45-க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Post a Comment

0 Comments