Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு - அரசு பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்புவிப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ள ஆணை!

ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு - அரசு பணியாளர்கள் 01.10.2025 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்புவிப்பு செய்து பணப்பலன் பெற்றுக் கொள்ள ஆணை!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையின்படி அரசுப்பணியாளர்கள் எதிர்வரும் 01.10.2025 முதல் 15 நாள்கள் ஈட்டிய விடுப்பு அரசுக்கு ஒப்புவிப்பு (Surrender) செய்து பணப்பலன் பெற்று கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி 27.04.2020-க்கு முன்பு கடந்த முறை எந்த தேதியில் ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு வழங்கப்பட்டதோ அந்த தேதியில் மட்டுமே ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு (Surrender) செய்ய தகுதியுள்ள நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் மனுக்களுக்கு அந்த தேதியிலேயே ஈட்டிய விடுப்பு ஒப்புளிப்பு செய்ய அரசு விதிகளில் இடமில்லை என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் 27.04.2020 முதல் 30.09.2025 வரை அரசுப்பணியில் புதிதாக சேர்ந்தவர்கள் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments