அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதன் நிர்வாகங்களால் முன்அனுமதி பெறா மல் அரசு விதிகளுக்கு முரணாக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்குவது குறித்து பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்பட்டன.
அந்தத் தீர்ப்பாணைகளை எதிர்த்து தமிழக அரசால் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் மனுதாரர்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணைகளை செயல் படுத்தும் வகையில் 16 ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் நியமன ஒப்புதல் அளித்து, ஊதியம் மற்றும் பிற பலன்களை வழங்க வேண்டும். இது நீதிமன்ற ஆணை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்