10th standard
மார்ச்/ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வருகிற 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள். தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் 16.05.2025 அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று. தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) காலை 10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான
அனைத்துப் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் தங்களது User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி மேற்காண் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
11 standard
2024-2025 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் 16.05.2025 (வெள்ளிக் கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு 18.05.2025 அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை (TML) பிற்பகல் 3.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும், அதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கான அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையினை 16.05.2025 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தங்களது User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்