பார்வையில் காணும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளவாறு, மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2025 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தற்போது. பார்வை-2-இல் காணும் அரசாணையின்படி, 2024-2025 கல்வியாண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகளுக்கு பிறகு தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு, முதலில் தங்களது விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து, விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே. தங்கள் பள்ளி மாணாக்கர் மற்றும் தங்கள் தேர்வு மையத்தில் தனித்தேர்வர்களாகத் தேர்வெழுதியோர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால் 20.05.2025 (செவ்வாய்க் கிழமை) காலை 11.00 மணி முதல் 24.05.2025 (சனிக் கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய விரும்பும் பள்ளி மாணாக்கர், தாங்கள் பயின்ற பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் காணும் குறிப்பில் இவ்வியக்ககத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட பார்வை -1-இல் செய்திக் எனவே, பள்ளி மாணவர்கள்! தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யத் தங்களது பள்ளியை அணுகும்போது, தாங்கள் அதற்கேற்ப தகுந்த ஏற்பாடுகளைத் தயாராக செய்து வைத்திருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User ID. Password-ஐ பயன்படுத்தியும். கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றியும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்திட அனைத்துப் பள்ளித் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்களும் உரிய
www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'click to access to online portal rன்ற வாசகத்தினை click செய்து தங்களது பள்ளியின் USER-ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, பின்னர், HSE FIRST YEAR 2025 SCAN COPY APPLICATION என்பதை click செய்து, திரையில் தோன்றும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து தேவைப்படும் நகல்களை எடுத்துக் கொள்ளவேண்டும் மேலும், தேர்வர்களுக்கான அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து தேர்வர்களுக்கு வழங்கவேண்டும்.
மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க வரும்பொழுது, அன்னாரிடம் மேற்காண் படிவத்தை அளிக்க வேண்டும். அதில், எந்தெந்தப் பாடங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவை என்ற விவரங்களை மாணவர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்தி அப்படிவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
விடைத்தாள் நகலுக்குரிய தொகையினைப் பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்