ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய். இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகின்றான்.
நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபீஸ் வருவதில்லை. வீட்டில் வளர்க்கப்படும். நாய், பூணை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும்.
நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும்.
* ரேபீஸ் நோய்க்கு ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசிகள் உள்ளன.
நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபீஸ் நோயை 100% வரவிடாமல் தடுத்து விடலாம். நாய்கடித்தவுடன் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும்.
முதல் நாள்
முதல் தவணை
3வது நாள்
இரண்டாவது தவணை
7 வது நாள்
மூன்றாவது தவணை
28 வது நாள்
நான்காவது தவணை
இந்த தடுப்பூசி கைகளில் (Intra Dermal) தோலுக்கு கீழேப் போடப்படுகிறது.
மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுளோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது. இந்த ARV மற்றும் இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24X7) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்