மேலே முதலாவது முதல் ஐந்தாவது வரை படிக்கப்பட்ட அரசாணைகளில் பட்டயக் கல்வியை முடித்து, தேர்வு எழுத வழங்கப்பட்ட வாய்ப்புகளையும் முடித்து, தேர்ச்சி பெறாமல் நிலுவை பாடங்கள் (Arrears) வைத்துள்ள மாணாக்கர்களுக்கு முறையே ஏப்ரல் 2015, அக்டோபர் 2015 அக்டோபர் 2016, ஏப்ரல் 2017, ஏப்ரல் 2018, அக்டோபர் 2018, அக்டோபர் 2019, ஏப்ரல் 2020, ஏப்ரல் 2021 அக்டோபர் 2021 ஏப்ரல் 2022 மற்றும் அக்டோபர் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகளில், கலந்து கொள்வதற்கான சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
2. மேலே ஆறாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அவர்கள் சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டும் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள மாணாக்கர்கள், அந்நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்காக எதிர்வரும் பருவத் தேர்வுகளில் கலந்து கொள்ள தங்களுக்கு வாய்ப்பினை வழங்குமாறு அவ்வியக்ககத்திற்கு கோரிக்கைகள் வருகின்றன என்றும், மாணாக்கர்களின் நலன் கருதி, எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது மட்டும். பட்டயக் கல்வியினை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணாக்கர்களுக்கு சிறப்பு வாய்ப்பின் (Grace Chance) மூலம் தேர்வு எழுதவும், அத்தேர்வினை எழுதும் மாணாக்கர்களுக்கு மட்டும் கீழ்க்கண்டவாறு தேர்வுக் கட்டணத்தினை நிர்ணயம் செய்தும் அரசாணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்