Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Festival Good Time: பொங்கல் வைக்க உகந்த நேரம்

பொங்கல் திருநாளில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடும் நேரம் குறித்து பார்ப்போம். 
நாளை காலை 6.42 மணிக்கு சூரிய உதயம். நல்லநேரம் காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் இருந்தாலும், மகர ராசியில் சூரிய பகவான் பகல் 11.58 மணிக்குத்தான் பிரவேசிக்கிறார். எனவே மகர சங்கராந்திப் பொங்கல் என்ற அடிப்படையில், பொங்கல் வைக்க பகல் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் நல்ல நேரம் உள்ளது. அந்த நேரத்தில் குரு ஓரையும் வருவதால் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

அதேசமயம், சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம். சூரிய உதயத்தின்போது அந்த பொங்கலை நைவேத்யம் செய்துவிடலாம். அந்த நேரத்தில் வைப்பது கஷ்டம் என்றால் காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இன்னொரு நல்ல நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். முதலில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி அலங்கரித்து, பின் பொங்கல் வைத்து வழிபடலாம். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். அதில் சிறிதளவை குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது முன்னோர்களின் வாக்கு ஆகும்.

Post a Comment

0 Comments