பள்ளிக் கல்வித்துறையில் 47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை.
பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் -10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post), 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் - ஆணை வெளியிடப்படுகிறது.
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்து ஆராய பள்ளிக்கல்வி அமைக்கப்பட்டது. செயலாளர் முதன்மைச் தலைமையில் அவர்கள் குழு
3. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தின்படி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் 09.02.2024 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பள்ளிக்கல்வி1) வரிசை எண். (1) முதல் வரிசை எண். (41) வரை இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 எண்ணிக்கையிலான மொத்த தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றலாம்.
i) வரிசை எண். (42) முதல் வரிசை எண். (53) வரை இடம் பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியரல்லாத மொத்தம் 5418 எண்ணிக்கையிலான தற்காலிக பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக தொடரலாம். இப்பணியிடங்களில் இருப்பவர்கள் ஓய்வு பெறும்போது, இந்த பணியிடங்கள் சரண் செய்யப்பட வேண்டும்.
iii) வரிசை எண். (54) முதல் வரிசை எண். (55) வரை இடம் பெற்றுள்ள ஆசிரியரல்லாத மொத்தம் 145 எண்ணிக்கையிலான பணியிடங்களை தற்காலிகமாக தொடரலாம். இப்பணியிடங்களில் இருப்பவர்களுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கலாம்.
iv) வரிசை எண். (56) மற்றும் வரிசை எண். (57)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 2 முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்) மற்றும் (பெண்) பணியிடங்களை புத்தாக்கம் (Revival) செய்திடலாம்.
4. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில், 09.02.2024 அன்று பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற்றகூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் (Minutes of the meeting) அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் தற்காலிகப் பணியிடங்களு 4/24 பின்வருமாறு ஒருங்கிணைந்த அரசாணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கோரியுள்ளார்:-
1) வரிசை எண். (1) முதல் வரிசை எண். (41) வரை இடம் பெற்றுள்ள பல்வேறு வகையான ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 எண்ணிக்கையிலான மொத்த தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக தொடர்தல்.
i) வரிசை எண். (42) முதல் வரிசை எண். (53) வரை இடம் பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் பல்வேறு ஆசிரியரல்லாத 5418 எண்ணிக்கையிலான தற்காலிக பணியிடங்களை, இப்பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப்பின் ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவர்கள் ஒய்வு பெறும் வரை தற்காலிகமாக தொடரலாம். இந்த பணியிடங்கள் அவர்கள் ஓய்வுக்குப் பின் சரண் செய்யப்பட வேண்டும்.
ii) வரிசை எண். (54) முதல் வரிசை எண். (55) வரை இடம் பெற்றுள்ள ஆசிரியரல்லாத 145 எண்ணிக்கையிலான பணியிடங்களை தற்காலிகமாக தொடரலாம். இப்பணியிடங்களுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்.
iv) வரிசை எண். (56) மற்றும் வரிசை எண். (57)-இல் குறிப்பிடப்பட்டுள்ள 2 முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்) மற்றும் (பெண்) பணியிடங்களை புத்தாக்கம் (Revival) செய்திட குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், புத்தாக்கம் செய்தல்.
5. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு அதனை ஏற்று இவ்வரசாணையின் இணைப்பு 1-இல் கண்டுள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், இணைப்பு 2-இல் கண்டுள்ள 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்களின் ஓய்வுக்குப் பின் நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாக (Vanishing post) அறிவித்து, அவர்கள் ஒய்வு பெறும் வரை தற்காலிக பணியிடங்களாக தொடரலாம் என்றும், இப்பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஒய்வு பெறும் போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும், இணைப்பு 3-இல் கண்டுள்ள 145 பணியிடங்களுக்கு கடைசியாக தொடராணை வழங்கப்பட்டு தொடராணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
6. மேலே, பத்தி 3 இல் வரிசை எண். (56) மற்றும் வரிசை எண். (57)-இல் குறிப்பிட்டுள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்) மற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பெண்) ஆகிய இரு பணியிடங்களுக்கு புத்தாக்கம் (Revival) செய்து, மேலேநான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
KALVI ALERT:
AAVIN- ஆவின் நிறுவனத்தில் வேலை
TEACHERS WANTED ALL SUBJECTS - ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை
ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை
TEACHER JOBS - 7 பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள்
TET பதவி உயர்வு வழக்கு - புதிய செய்தி
Teachers Wanted - PG / UG With B.Ed., (All Subjects), DTED / Montessori
/Hindi / PET
TEACHERS WANTED - ALL SUBJECTS
TEACHERS WANTED - ஆசிரியர் வேலைக்கு ஆட்கள் தேவை
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்