Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

TNPSC - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவல்



COMBINED TECHNICAL SERVICES EXAMINATION (INTERVIEW POSTS) (Certificate Verification)-CLICK HERE

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்:07/2024, நாள் 15.05.2024 இல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வுப் பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் / குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் 03.12.2024 முதல் 17.12.2024 வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அவ்விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments