Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TN CM NEWS: தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள புதிய ஆணை

TN CM NEWS: தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள புதிய ஆணை
2001-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" வழங்கிட அரசாணை (நிலை) எண்.795. பொது (சட்டம் (ம) ஒழுங்கு-சி)த் துறை, நாள் 16.06.2000-இன் வாயிலாக ஆணையிடப்பட்டது. இவ்விருதானது 3/3" விட்டம் அளவுள்ள வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9,000/- மதிப்புடைய பதக்கம், ரூ.25,000/-க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும்.

இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.25,000/-த்திலிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை (நிலை) எண்.832. பொது (சட்டம் (ம) ஒழுங்கு-சி)த் துறை, நாள் 09.12.2024-இல் உரிய ஆணை வெளியிடப்பட்டது.

Post a Comment

0 Comments