சிறுபான்மை பள்ளிகளில் பணி நியமனம், பதவி உயர்வு TET அடிப்படையில் வழங்கவும், உச்ச நீதிமன்றத்தில் TET வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளவும் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், துவரலகண்மாய் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த திரு.ம.ஜெயராஜ் என்பார் 09.09.2022 அன்று 2160 நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டமையால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு அப்பள்ளியிலேயே இடைநிலை ஆசிரியராகப் பணிபுரந்த திரு.ஏ.ஆரோக்கியசாமி என்பாருக்கு 16.122022 முதல் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்படி பள்ளியில் ஏற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பகையஞ்சான் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்த திருமதி.எம்.குளோரோ ரோஸ்லின் மேரி என்பாரை 05.01.2023 அன்று மாறுதல் செய்தும் திருமதி.எம்.குளோரோ ரோஸ்லின் மேரி என்பாரை மாறுதல் செய்யப்பட்டதால் ஏற்பட்ட காலிப்பணியிடத்திற்கு சாலைக்கிராமம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் உபரி இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்த திருமதி.ம.ஜெசி இருதய மேரி என்பாரை 06.012023 அன்று மாறுதல் செய்தும் பள்ளி நிர்வாகத்தால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்