Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய சமீபத்தில் வெளியான தகவல்

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய சமீபத்தில் வெளியான தகவல்

தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆண்டுதோறும் பொங்கலுக்கு பல்வேறு வகையான பொங்கல் பரிசு பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 2025 ஜனவரி ஆண்டிற்கான  பொங்கலுக்கான பரிசு தொகுப்புகள் வழங்க அரசு தயாராக உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. 
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பச்சரிசி, சக்கரை, கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு அதேபோல் வழங்கப்படுமா? அல்லது அவற்றில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ள முக்கிய தகவல்: சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது பொங்கல் பரிசு பொருட்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு பொருட்கள்  தமிழக முதலமைச்சர்  அவர்கள் வரும் வாரத்தில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறையுடன் சேர்ந்து அனைத்து ஏற்பாடும் மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

இது போன்ற முக்கிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE


Post a Comment

0 Comments