Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10th std Public Exam Hall ticket 2025 - பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஹால் டிக்கெட் - அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

நாளை பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட்

நாளை முதல் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் விநியோகம்
- அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் GR எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 13.11.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யுமாறும், அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை 15.11.2024 முதல் 22.11.2024 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மேற்கண்ட நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மார்ச்/ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 24.12.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரையினை வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments