Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC இன்று (11.11.24) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

TNPSC இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 
நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த, 2024-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை (shortfall vacancies) நிரப்ப 50 தேர்வர்களை தெரிவு செய்துள்ளது.

மேலும், 2024-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள்) மூலம் 12 குறைவு காலிப்பணியிடங்களையும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) மூலம் 135 குறைவு காலிப்பணியிடங்களையும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி IV பணிகள்) மூலம், 434 குறைவு காலிப்பணியிடங்களையும், ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப பணிகளிலும் குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments