Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Science Teacher -சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

Science Teacher -சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி யாற்றும் அறிவியல் ஆசிரியர்கள், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் 'அறிவியல் நகரம்' அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி மாணவர்களின் அறிவை வடிவமைப்பதிலும், அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும், உயர் கல்வியில் அறிவி யல் துறையை மாணவர்கள் தேர்ந்தெடுக்கவும், விஞ்ஞானிகளாக உரு வாவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசின் அறிவியல் நகரம் ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2024-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவி யல் அல்லது புவியியல் அல்லது விவசாயம் ஆகிய 5 துறைகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக் கவுரையை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பப் படிவத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பரிந்துரை கடிதம் பெற்று டிச.23-ஆம் தேதிக்குள் சென்னை கிண்டியில் உள்ள அறிவியல் நகரம் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விருதுக்கு தேர்வு செய்யப்படும் 10 அறிவியல் ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments