Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Education -பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டணம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக் காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக் ககத்தின் இயக்குநர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுக் கட்டணமாக செய்முறைத் தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.225, செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளிமாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, சீர்மரபி னர் ஆகிய பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் மிகாமல்இருக்கும் பிசி, பிசி(முஸ்லிம்) பிரிவினருக்கும், பார்வை மற்றும் செவித் திறன் குறைந்த மாற் றுத்திறனாளி மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இதர அனைவரிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் டிச. 10-ஆம் தேதிக் குள் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்க ளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவு றுத்த வேண்டும். 11-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டணத் தொகையையும் இணையதளத்தில் வரும் நவ.20 முதல் செலுத்தலாம்.

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் அடங் கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப் பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதி விறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்தவும் அறிவுறுத் தப்படுகிறது. இது தொடர்பான சந்தேகங்க ளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந் தப்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கி ணைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments