Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pan card - பான் கார்டு அட்டை- புதிய அப்டேட்- புதிய பான் கார்டின் பயன்கள்


Pan card - பான் கார்டு அட்டை- புதிய அப்டேட்- புதிய பான் கார்டின் பயன்கள்

பான் கார்டு 2.0' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ள நிலை யில், ஏற்கனவே பான் வைத்திருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க வேண்டியதிருக்குமா என்பது உள்பட பல கேள்விகள் எழுகின்றன.

வருமான வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும்,வர்த்தக செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் கியூ.ஆர்.குறியீடு உள்ளிட்ட கூடுதல் வசதிகள் கொண்ட பான் கார்டை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


வருமான வரித் துறையின் மின்னணு கட்டமைப்பை மறு சீரமைக்கவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பதிவுகளை எளிதாக்கவும், வரி செலுத்துவோர் எளிதில் வருமான வரித் துறையின் சேவைகளை தொடர்பு கொள்ள ஏற்ற வகையில், புதிய பான் கார்டு இருக்கும். என கூறப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தில், பொது வான அடையான ஆவ ணமாக பான் கார்டை அரகத் துறைகள், அமைப்புகள் பயன் படுத்தும் நோக்கில், பான் கார்டுகள் மேம்படுத்தப்பட உள்ளன.

எனினும், எப்போது, எவ்வாறு பான் கார்டுகள் மாற்றித் தரப்படும் என்ற விபரத்தை வருமான வரித்துறை விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க் கப்படுகிறது.

புதிய அம்சங்கள் என்ன?

புதிய பான் கார்டில், கூடுதல் பாது காப்பு மற்றும் செயலாக்கத்துக்கான பிரத்யேசு 'கியூ ஆர்.குறியீடு' இருக்கும்.

பான், டான், டின் ஆகிய அனைத்து எண்களும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

வரி செலுத்துவோர் பதிவு நடைமுறை முற்றிலும் மறுவடிவமாக இருக்கும்.

அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும், பொதுவான வணிக அடையாள அட்டையாக இருக்கும்.

புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

 மேம்படுத்தப்பட்ட பான் கார்டு பெற கட்டணம் ஏதுமில்லை. இலவசமாக அரசு மாற்றித் தரும்.

புதிய பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்க தேவையில்லை.

நடைமுறையில் ஏற்கனவே இருக்கும் பான் எண், தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும்

கியூ.ஆர்.குறியீடு உட்பட புதிய அம்சங்கள், தானாக மேம்படுத்தப்பட்டு, புதிய கார்டு வழங்கப்படும்.

வரி செலுத்துவோருக்கு என்ன பயன்?

 வரி செலுத்துவோரின் பதிவுக்கான சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்கும்.

பான் எண் வைத்திருப்பவர்கள், கட்டண மின்றி பான் 2.c-க்கு மேம்படுத்திக் கொள்ளலாம்.

பயனாளிகளின் தகவல் பாதுகாப்பு. சேவை டெலிவரி இணைந்த நடைமுறையாக இருக்கும்.

Post a Comment

0 Comments