Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்கள் பணி நியமனம் முக்கிய தகவல்

ஆசிரியர்கள் பணி நியமனம் முக்கிய தகவல்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் இருப்பதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,600 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மாணவர்களின் கல்வி திறனுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பதை கருத்தில் கொண்டு 2026ம் ஆண்டுக்குள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தமாதம் இறுதிக்குள் 3,000 ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பணிநியமனம் வழங்குவார் என தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதே.

Post a Comment

0 Comments