Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள போதக காப்பாளர் காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர்/காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல்- விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரியது உரிய கருத்துருக்களை அனுப்பிட பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தல் சார்பு.

பார்வை. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.06 ந.க.எண்.072841சி3/2024 நாள்.07.11.2024

பார்வையில் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள போதக காப்பாளர்/காப்பாளினி மற்றும்இடைநிலை காப்பாளர் காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல் சார்பாக விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.

எனவே பார்வையில் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியப் படிவத்தில் விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடனும், சார்ந்த ஆசிரியரின் விண்ணப்பத்துடனும், 18:112024-க்குள் கருத்துருக்களை அனுப்பிட அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் பொருள் சார்ந்து ஆசிரியர் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை எனில் இன்மை அறிக்கையினை கட்டாயம் அனுப்பிட வேண்டும். இதில் காலதாமதம் ஏதும் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.

கருத்துருவில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.

11 தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம்

2) சார்ந்த ஆசிரியரின் விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பம்

3) உரியப் படிவம்

4) பணிப்பதிவேட்டின் முதல் இரண்டு பக்க நகல்கள் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்)

5) படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்க நகல் மற்றும் அதற்குரிய ஆணை நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்)

Post a Comment

0 Comments