Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பாதி விலையில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனை

பாதி விலையில் தமிழ், ஆங்கில புத்தகங்கள் விற்பனை என செய்திகள்  வெளியாகி உள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியான 3,000-க்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்களை 50 சதவீத தள்ளுபடி விலையில் சுவாசம் பதிப்பகம் வழங்கி வருகிறது.

சுவாசம், காலச்சுவடு பதிப்பக நூல்கள் முறையே 30 மற்றும் 35 சத வீத கழிவில் விற்பனை செய்யப்படுவதாகவும், மற்ற அனைத்து பதிப் பக நூல்களும் பாதி விலையில் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுமட்டுமன்றி குழந்தைகளுக்கான புத்தகங்கள், எழு துபொருள்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றுக்கும் 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், ரங்கா காலனியில் அமைந் துள்ள சுவாசம் புக்கர்ட் புத்தகக் கடையில் இந்த சிறப்பு விற்பனை கடந்த திங்கள்கிழமையில் இருந்து நடைபெற்று வருகிறது.

வரும் புதன்கிழமை (நவ.27) வரை வாசகர்களும், பொதுமக்களும் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், நேரடி விற்ப னையில் மட்டுமே சிறப்புக் கழிவு வழங்கப்படும் என்றும் சுவாசம் புக் கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சௌந்தர்யா ஜெய்க ணேஷ் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 8148066645 அல் லது 8148080118 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments