தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் கலந்த திங்கட்கிழமை என்று திறக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பருவம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வந்துவிட்டது. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
பருவமழையும் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவதில் வரும் மாதங்களில் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள். எனவே இரண்டாவது பருவத்தின் இறுதியில் நடைபெறும் அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் அமைய வாய்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு எப்போது நடைபெறும் எப்போது முடிவடையும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் 16ஆம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வு தொடங்க உள்ளது. அது முதல் தொடர்ந்து நடைபெற்று டிசம்பர் 23ஆம் தேதி திங்கள் கிழமையுடன் தேர்வுகள் முடிவடையும். டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி புதன் கிழமை வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படும்.
ஜனவரி 2ஆம் தேதி வியாழக் கிழமை முதல் மூன்றாம் பருவம் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்