Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Bigg Boss Season 8-பிக் பாஸ் சீசன்-நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா

Bigg Boss Season 8-பிக் பாஸ் சீசன்-நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா

விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட நிகழ்ச்சியான bigg Boss 8வது சீசன் இன்று துவங்கவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதுவரை 7 சீசன்களை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், 8வது சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியவில்லை, தற்காலிகமாக இதிலிருந்து விலகிக்கொள்வதாக கமல் அறிவித்து இருந்தார்.

அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிக் பாஸ் படப்பிடிப்பில் 18 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரமாண்டமாக துவங்கியுள்ள பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கினார் என்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments