Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET LATEST NEWS - பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம்- காலி பணியிடங்கள் அதிகரிக்க

TET LATEST NEWS - பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம்- காலி பணியிடங்கள் அதிகரிக்க


அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் டிஆர்பிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தெரிவித்ததாவது: 
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் 1768 என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 2768 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்பட்டு ஒன்றரை மாதம் ஆன பிறகும் இன்னும் கீ ஆன்சர் கூட வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாகவும் பெரிதும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


மேலும் அரசு நிர்ணயத்துஉள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8000 மேற்பட்ட காலி இடங்கள் உள்ளதாகவும் இதற்காக தற்காலிக ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வுகள் 8000 காலி பணியிடங்களை தற்போது நடந்துள்ள போட்டி தேர்வை கொண்டு நிரப்பபட வேண்டும் என ஆசிரியர் பெரு வாரியத்திற்கு தேர்வுகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments