Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி வேலை நாட்கள் குறைப்பு- மாணவர்கள் மகிழ்ச்சி-முழு விவரம் உள்ளே!

பள்ளி வேலை நாட்கள் குறைப்பு- மாணவர்கள் மகிழ்ச்சி-முழு விவரம் உள்ளே


அரசுப் பள்ளி ஆசிரியர்க ளின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைமுடிந்துஅனைத்து பள்ளிகளும்கடந்தஜூன் 10- ம் தேதிதிறக்கப்பட்டுசெயல் பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான (2024 -25) வருடாந்திர நாள்காட் டியை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதில், இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள்220ஆகஅறி விக் கப்பட்டது. குறிப்பாக, 19 சனிக் கிழமைகள் பள்ளி கள் செயல் படும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.

இது மாணவர்கள், ஆசிரி யர்கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியது. பணிச்சுமை கருதி வேலை நாட்களை குறைக்க வேண் டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கல்வித் துறைக்கு கோரிக்கை வைக் கப்பட்டது. அதை ஏற்று, பள்ளி வேலை நாட்கள் தற்போது 210 குறைக்கப்பட்டுள்ளது. ஆக

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது-

பள்ளிகளுக்கான குறைந் தபட்ச வேலை நாட்கள் 220 ஆகநிர்ணயம் செய்யப்பட்டி ருந்தது. ஆசிரியர் சங்கங்க ளின் கோரிக் கையை ஏற்று, இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன் படி, கற்றல், கற்பித்தல், தேர்வுகள்உள்ளிட்டபணிகளுக்கு 210 வேலை நாட்கள் நிர்ண யம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர்களின்பயிற்சிக்கு 10 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் திருத்தப்பட்ட நாள்காட் டியை பின்பற்றி செயல் படு மாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். என் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments